2024-25 ஆம் ஆண்டு IQAir அறிக்கையின்படி, உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் தெற்காசியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்தப் பட்டியலில் சாட் முதலிடத்திலும், வங்காளதேசம் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 3-வது இடத்திலும், இந்தியா 5-வது இடத்திலும் உள்ளன. ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட நார்டிக் நாடுகள் தூய்மையான நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.