விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு நிறைவு

79பார்த்தது
விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு நிறைவு
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 278 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவாதியுள்ளன. மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.84 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மாலை 6 மணிக்குள் வாக்கு சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி