கடந்த 2019-ல் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், திமுக ஆதரவாளருமான கருணாஸிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “இபிஎஸ்-க்கு நீதிமன்றம் கொடுத்த பிறந்தநாள் பரிசு இது” என்றார்.