IPL 2025 சீசனில் RCB அணி தனது முதல் வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தியது. 17 சீசன்களாக வெற்றிக்காக போராடிய அணி முதல் முறை கோப்பையை வென்றது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக பெங்களூரில் நடந்த கொண்டாட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு அரசியல்வாதிகள் கையில் எடுத்த கொண்டாட்ட முயற்சியே காரணம் எனவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றமும் அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.