கரூரை சேர்ந்த இளவரசன் (38) வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பிளஸ் 2 படிக்கும் 16 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் மாணவிக்கு இளவரசன் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இது குறித்து மாணவியின் பெற்றோர் நேற்று (ஜன. 17) மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இளவரசனை போக்சோவில் இன்று (ஜன. 18) கைது செய்தனர்.