கரூர் அருகே அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் முழங்காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காலில் காயமடைந்த தமிழரசன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.