சிவகங்கையில் பத்ரகாளி கோயிலின் தற்காலிக ஊழியராக இருந்த அஜித்குமார் காவல்துறையின் விசாரணையின்போது கொல்லப்பட்டார். விசாரணையின் போது தன்னையும் போலீசார் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் புகார் கூறினார். போலீசார் தாக்கிய காயத்தால் ஏற்பட்ட வலிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காவலர்கள் தாக்கிய புகார் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று நவீன்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.