திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகே போக்குவரத்து காவல் துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற இளைஞர், தலைக்கவசம் அணியவில்லை. இதன் காரணமாக, அந்த இளைஞரை காவலர் ஒருவர், சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தலைக்கவசம் அணியாத இளைஞரை, கண்மூடித்தனமாக போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.