ரவுடிகளை பிடிக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு

88415பார்த்தது
ரவுடிகளை பிடிக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தலைமறைவாக இருந்த கொலையாளிகள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் பெருந்துறை அருகே பதுங்கி இருந்தனர். நெல்லை காவல்துறையினர் தேடி வந்த போது குற்றவாளிகள் அறிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். அப்போது தற்காப்புக்காக கொலையாளிகள் மீது உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, கொலையாளிகள் 4 பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி