குஜராத்: பரூச்சில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவால் 4 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். ஜிஎஃப்எல் ரசாயன தொழிற்சாலையில் நேற்றிரவு டிச.28 வால்வு ஒன்றில் பழுது ஏற்பட்டு விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. விஷவாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததை அடுத்து, 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.