ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் நன்மையைப் பெற முடியாது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் இணைப்பைப் பெற்றிருந்தால், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படாது. மேலும், ஆண்கள் இந்தத் திட்டத்தைப் பயன்பெற முடியாது. இத்திட்டத்தில் பயன்பெற அருகிலுள்ள கேஸ் ஏஜென்சி அல்லது https://www.pmuy.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.