பாஜகவுக்கு சென்று வந்தவருக்கு பாமக துணைத்தலைவர் பதவி

50பார்த்தது
பாஜகவுக்கு சென்று வந்தவருக்கு பாமக துணைத்தலைவர் பதவி
பாஜகவுக்கு சென்று வந்த முன்னாள் திருத்தணி எம்எல்ஏ ரவிராஜ் பாமக மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து தைலாபுரம் திரும்பிய பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நிர்வாகிகளை மாற்றம் செய்துள்ளார். திருவள்ளுவர் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளராக ராசா சங்கரும், கடலூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக வினோத் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராமதாஸ் மீண்டும் நிர்வாகிகளை மாற்ற தொடங்கியதால் அன்புமணி உடனான சமரச பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி