பாமகவை மருத்துவர் ராமதாஸ் துவக்கிய போது பார்ப்பனர்களை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று கூறினார் ஆனால் இப்போது பாமகவில் நடக்கும் குடும்பச் சண்டையை தீர்த்து வைக்க ராஜகுரு குருமூர்த்தி களம் இறக்கப்பட்டுள்ளார் என்று திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் பாஜகவில் இருக்கும் அண்ணாமலைகளோ, நயினார்களோ சாலை ஓரத்தில் கூவுவதற்குத்தான் உரிமை. கட்சியின் அதிகாரம் மக்களுக்கே தெரியாத ஆடிட்டர் குருமூர்த்தியிடம்தான் என சாடியுள்ளார்.