பாமக நிறுவனர் ராமதாஸை, ஆடிட்டர் குருமூர்த்தி இன்று (ஜூன் 05) தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளானது. இது குறித்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆரம்ப காலத்தில் இடதுசாரி சிந்தனையாளர்களின் வரவேற்பை பெற்ற பாமக, தற்போது வலதுசாரி சிந்தனைக்கு முழுமையாக சென்றுவிட்டது" என்று விமர்சனம் செய்துள்ளார்.