கடலூர் உள்ளிட்ட 25 மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்கான பட்டியலையும் தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோருடன் இன்று (மே 29) மாலை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அதன்பேரில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி, அன்பழகம், சிவப்பிரகாசம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.