பாமக சார்பில் நடந்த சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து சமுதாயங்களுக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியல் சமுதாய மக்களுக்கு வழங்கப்படும் 18% இட ஒதுக்கீட்டை 20%ஆக உயர்த்த வேண்டும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 % இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.