மும்பை, தானே புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் 5 பேர் இன்று (ஜூன் 9) பலியாகினர். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது X தளத்தில், "மோடி 2025 குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு, 2047 கனவுகளை விற்று வருகிறார். இன்று நாடு எதை எதிர் கொள்கிறது என யாருக்கு தெரியும்? ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.