மத்திய அரசு நாடு முழுவதும் சிறு குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதான மந்திரி கிசான் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. ஆண்டுதோறும் ரூ.6000 என 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அதன்படி, இந்த திட்டத்தின் மூலம் 19 தவணையாக வரும் ஜனவரியில் ரூ.2000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என விவசாயிகள் நினைத்தனர். ஆனால், பிப்ரவரி மாதம் தான் அந்த தொகை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.