சென்னை ஐஐடி மற்றும் வேலூர் சிஎம்சி கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக 'புளூட்டோ' எனும் சிறிய ரோபோவை உருவாக்கியுள்ளனர். மருத்துவமனைகள், வீடுகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ பக்கவாதம் மற்றும் முதுகு தண்டுவட பாதிப்புக்கு ஆளான நோயாளிகளுக்கு தீர்வு கொடுக்கும். இதன் வடிவமைப்பில் மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.