பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4ம் தேதி தொடக்கம்

75பார்த்தது
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4ம் தேதி தொடக்கம்
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வினை, 8,021,57 மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 46,000 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

தொடர்புடைய செய்தி