போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவை சேர்ந்த அல் நாசர் FC அணியுடனான தனது ஒப்பந்தத்தை 2026-ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தால், அவர் ஆண்டுக்கு $204 மில்லியன் (₹1,950 கோடி) சம்பளமாக பெறுகிறார். இதன் மூலம், அவர் மாதத்திற்கு $17.75 மில்லியன், ஒரு நாளைக்கு $633,928, ஒரு மணி நேரத்திற்கு, $24,413, ஒரு நிமிடத்திற்கு $406.88 (₹34,826) சம்பாதித்து வருகிறார்.