குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இந்நிலையில், மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மூலம் விபத்துக்கான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோர சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.