கஜகஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் வானில் பலமுறை மேலும் கீழுமாக வட்டமடித்து இறுதியில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.