விமான விபத்து குறித்த விசாரணையில் வெளிப்படையாக இருப்போம் என டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். "பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முதல் மற்றும் முக்கிய முன்னுரிமை. அதில் எந்த சமரசமும் கிடையாது. நம்பிக்கை மற்றும் அக்கறையின் அடிப்படையில் இந்த குழுமத்தை உருவாக்கினோம். இது ஒரு கடினமான தருணம். ஒரே நேரத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார்.