அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் அவற்றை டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடந்துவருகிறது. தற்போது வரை 32 பேரின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 12 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.