கனடாவின் நோவா ஸ்கோசியாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் 80 பயணிகளுடன் சென்ற ஏர்-கனடா விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் லேண்டிங் கியர் செயலிழந்த நிலையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரிசி திடீரென தீப்பிடித்தது. முடிவில் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதில், பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர்.