11-வது புரோ கபடி லீக் போட்டியின் இறுதி போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. புனேவில் இன்று (டிச.29) நடைபெற்ற இறுதிப்போட்டியின், முதல் பாதி ஆட்டநேர முடிவில் 15-12 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் ஹரியானா ஆதிக்கம் செலுத்த, இறுதியில் 32-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.