தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியதாக அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்தாண்டு செப்.,1 முதல் பிப்.,4ஆம் தேதி வரை 2,444 நிலையங்களில் 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை 2,247.52 கோடி ரூபாய் விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கூடுதலாக 2,99,248 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.