வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

81பார்த்தது
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த மலையேற பக்தர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து, மே மாதம் இறுதி வாரம் வரைக்கும் வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள். இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி 26-ந் தேதி வருகிறது. இதையொட்டி வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. அதில், பக்தர்கள் வருகிற 1-ந் தேதி முதல் மே மாதம் இறுதி வரை வெள்ளியங்கிரி மலை ஏறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி