தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை அவரது பதவி காலம் முடிவடைந்த நிலையில், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி காணப்படுகிறார். இந்நிலையில், தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் அண்ணாமலை, தான் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அதற்கு “அரசியல் பொறுமையைக் கற்றுக்கொடுக்கிறது, கிரிக்கெட் அதை சோதிக்கிறது!" என கேப்ஷன் வைத்துள்ளார்.