நெல்லை: மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் திரையரங்கத்தில் கடந்த நவம்பர் மாதம் 'அமரன்' படம் திரையிடப்பட்டது. அதன்போது திரையரங்கின் மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டை சிலர் வீசி விட்டு சென்ற நிலையில் குற்றவாளிகளை விசாரணைக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் கைதான நபர்களின் வீடுகளில் இன்று (டிச. 28) காலை முதல் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.