ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிப்காட் காமராஜர் நகரைச் சேரந்த பரத் (20), விஷால் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஏற்கனவே ஹரி என்பவரை நேற்று (பிப்.3) போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பிடிக்க முயன்றபோது உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை ஹரி கத்தியால் குத்த முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.