நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே ஒருவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனங்கூரில் சேட்டு (45) என்பவர், வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இன்று (ஜூன் 7) அதிகாலை 3:30 மணியளவில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த டிஎஸ்பி சங்கீதா, விசாரணை நடத்தி வருகிறார்.