திருநெல்வேலி மாவட்டம் டவுன் மாதா பூங்கொடி தெருவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நேற்று (டிச. 25) இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நெல்லையில் வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆறு சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.