வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஏப்., 16) விசாரணை நடக்கிறது. புதிய சட்டதத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த மனு உள்ளிட்ட 10 மனுக்கள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரிய மேலாண்மை, நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் சட்டத் திருத்தங்கள் தேவை என்று அரசு கூறியிருந்தது.