நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் ஆர்யா வழங்கும் படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்’. இப்படம் மே 16 வெளியாகும் நிலையில் படத்தை வெளியிட தடை கோரி ஆர்.கே. எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன உரிமையாளர் ரமேஷ்குமார் மெட்ராஸ் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னுடைய படங்களின் தலைப்பை பயன்படுத்த அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், ஆர்யா பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.