மர்மமான முறையில் அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை வளர்ப்பு நாய்கள் கடித்துத் தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான ருமேனியாவின் புக்கரெஸ்ட் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. 34 வயதான அட்ரியானா நியா என்பவரை கடந்த 5 நாட்களாக காணவில்லை. பின்னர், மூடிய அடுக்குமாடி குடியிருப்பில் நாய்கள் சாப்பிட்ட பாதி சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பல நாட்களாக உணவின்றி தவித்த நாய்கள் உரிமையாளரின் சடலத்தை தின்றுள்ளது தெரியவந்தது.