புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதில், அப்பகுதியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அங்கு உணவருந்திய கருப்பையா என்பவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆர்.டி.ஓ., வட்டாட்சியர், போலீசார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.