அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள "விடாமுயற்சி" திரைப்படம் நாளை (பிப்.06) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருவருடம் கழித்து அஜித் படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.