நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மை நாட்களாக பெரியார் குறித்து கூறி வரும் கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் பெரியாரிய ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். இது தொடர்பாக சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ள இயக்குநர் அமீர், "யாருக்கெல்லாம் பெரியார் தேவை இல்லையோ அவரை விட்டு ஒதுங்கி, எங்களுக்கு வழி விடுங்கள், எங்களுக்கு பெரியார் வேண்டும், எங்களை வாழ விடுங்கள்" என்றார்.