டாஸ்மாக்கில் குளிர்பானம் குடித்தவர் மருத்துவமனையில் அனுமதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக்கில் நண்பர்கள் பீர் அருந்திய போது மதுப்பழக்கம் இல்லாத ஜான் என்பவர் குளிர்பானம் வாங்கி குடித்தார். காலாவதியான அந்த குளிர்பானத்தை குடித்ததால் ஜானுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டதோடு மயங்கி விழுந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசார் பார் உரிமையாளரை விசாரிக்கவில்லை என ஜான் தெரிவித்தார். நன்றி: பாலிமர் நியூஸ்