பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா முன்னிலையில் (30. 09. 2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழைக் காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட மழை மானிகளை தணிக்கை செய்து அதன் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும். மேலும் பேரிடரின்போது காவல்துறை, தீயணைப்புதுறை, ஊரகவளர்ச்சிதுறை மற்றும் இதர துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும்.
பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமானதாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்