வன உயிரின வார விழா பள்ளி மாணவர்க்கு ஓவியம், கட்டுரை போட்டி

155பார்த்தது
வன உயிரின வார விழா பள்ளி மாணவர்க்கு ஓவியம், கட்டுரை போட்டி
பெரம்பலூரில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவிய மற்றும் கட்டுரை போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்ப்பு.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், பெரம்பலூர் வனச்சரகம் சார்பில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தலைமையில், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன, இதில் பள்ளி மாணவர்களுக்கு வனங்கள் மற்றும் வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது , இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை, ஓவியம் மற்றும் கட்டுரைகளாக வெளிப்படுத்தினார்கள்.
மேலும்
பள்ளி மாணவ மாணவிகள், வனத்துறையினர், வனபாதுப்பு குறித்த விழிப்புணர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்,
இதில் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவில் வனச்சரக அலுவலர் பழனிகுமாரன், மற்றும் வனவர் பிரதீப்குமார், சிங்காரவேலன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி