டாக்டர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் புதிய விடுதி, பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், கற்றல் கற்பித்தல் அறைகள், 1000 பழங்குடியினர் வீடுகள், ஆகியவற்றை திறந்து வைத்து, 49,542 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை (14.04.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை பயனாளிகள் காணும் வகையில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் பயனாளிகளுடன் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் அமர்ந்து பார்வையிட்டனர். இந்நிகழ்வில் பல்வேறு துறைகளின் கீழ் 1,243 பயனாளிகளுக்கு ரூ.29 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.