ஆட்சியிலும், அமைச்சரவையிலும் பங்கு வேண்டும் -கிருஷ்ணசாமி

52பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கருத்தரங்கம்
மற்றும் நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது
கட்சியின் மாவட்ட செயலாளர் அருண் குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்
புதிய தமிழகம் கட்சியின்
நிறுவ தலைவர்
கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பேசினார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என்றும் தங்களுக்கு ஆட்சியில் மட்டுமல்லாமல் அமைச்சரவையிலும் பங்கு கொடுக்கக்கூடிய அளவுக்கு ஒரு மாற்றத்தை கொண்டு வருவதே புதிய தமிழகம் கட்சியின் இலக்கு இதற்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சியினருடன் சேர்ந்து கூட்டணி என்றும், திமுக அதிமுகவை தனியாக ஆட்சி அமைக்க விடமாட்டோம் என தெரிவித்தவர்,
2026 தேர்தலை நோக்கி திமுக அரசு பட்ஜெட் செய்துள்ளது, பெரிதாக ஒன்றும் அறிவிக்கவில்லை என தெரிவித்தவர் மத்திய அரசிடம், திமுக அரசு கொண்ட முரண்பாடு, மற்றும் மோதலினால் மத்திய அரசின் நிதி பெற முடியாமல் இருந்து வருவதாகவும், மும்மொழிகளை படிப்பதால் இவர்களுக்கு என்ன நஷ்டம் ஏற்படுகிறது, இவர்கள் மட்டுமே பிழைக்க வேண்டும், என நினைப்பதாக. தெரிவித்தவர்.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் என்பது மிக மிக குறைவு இதில் இமாலய ஊழல் நடந்துள்ளது, கொள்ளையடிக்கப்பட்ட ஊழல் பணம் ஆளும் கட்சியினரிடம் இருப்பதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி