பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் ஏ. ஐ. டி. யு. சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுது.
ஏ. ஐ. டி. யு. சி மாவட்ட தலைவர் ஞானசேகரன் மற்றும் அதனுடன் இணைந்த பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி அரசாணை 2D எண் 62 தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை 11-10-2017-ன் படி தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசால் அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதல் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18, 000 வழங்கிட வேண்டும், சுகாதார ஊக்குநர்களுக்கு அரசாணை எண் 42416/2023 / 14-01-2023 வெளியிடப்பட்டு 6 மாத கால தொகுப்பூதியம் மாதம் ரூபாய் ரூ. 2000 மிதம் நிலுவைத் தொகை ரூ. 12, 000/-
உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதில் 250க்கும்
மேற்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.