கிராம மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை ஊராட்சியில் உள்ள அய்யர்பாளையம்,
கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன், ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர், இதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில்,
தொண்டமான் துறை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யர் பாளையம் முதல் செம்மண்குட்டை இடையே , உள்ள பாதையை கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள், இந்த பாதையை
இந்த அதே ஊரைச் சேர்ந்த,
கணபதி மகன் செல்வம் என்பவர் அடியாட்களோடு வந்து பாதையை தடுத்து வருகிறார் மேலும் பால் வாகனத்தையும் வரவிடாமல் தடுத்து, மீறி வந்தால் கொளுத்தி விடுவேன் என்று மிரட்டி வருகிறார் இதுதொடர்பாக காவல்நிலையம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனுவாக கொடுத்திருந்தோம். எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது பாதையை இயந்திரம் கொண்டு கரை போட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையீடு செய்து, மக்கள் பயன்படுத்த வந்த, பொதுப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என்றும், ஒவ்வொரு நடவடிக்கை இல்லை என்றால் கிராம மக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி