பெரம்பலூர்: கிரஷர் லாரிகளை சிறைப்பிடித்த கிராம பொதுமக்கள்

69பார்த்தது
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம், கல்பாடி, க. எறையூர், பேரளி, நெடுவாசல் மற்றும் அருமடல் உள்ளிட்ட கிராமங்களில் செயல்படும் 80க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷர்களால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதில் மிகவும் குறுகலான, பொதுமக்கள் வசிக்கும் சாலையில் அரசு விதிமுறைகளை மீறி லாரிகளில் அதிக அளவில் பாரம் ஏற்றி செல்வதால் சாலைகள் சேதம் அடைவதோடு பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. 

பல முறை விபத்துகள் ஏற்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், மேலும் இது தொடர்பாக அரசு துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறி, கிராம பொதுமக்கள் இன்று திடீரென அவ்வழியே அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நிற்க தொடங்கியது. 

இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர்களும், லாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களும் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனி இதுபோல் நடக்காது என்று உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் விடுவிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி