பெரம்பலூரில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் இன்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் கருப்புக் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 138 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் உள்ள நிலையில் இவர்களுக்கு வேளாண்மை துறை சம்பந்தமான இ சி எஸ் முறையில் பயிர் கணக்கெடுப்பு முறையை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பணியாக திணிப்பதால் இதனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது மேலும் அரசின் கோரிக்கையை ஏற்று இப் பணியை ஏற்கும் பட்சத்தில் இதற்காக கணக்கெடுப்பு செய்ய தனி நபர்களை பணியமர்த்த வேண்டும் மேலும் இதற்கான கணினி உள்ளிட்ட மின்னணு உபகரணங்களை வழங்க வேண்டும் இதற்கு அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் இன்று மாலை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் அரசு தங்கள் கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.