திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டி கிராமம், அந்தோனியார் தெரு பகுதியை சேர்ந்தவர் சவரிநாயகம் இவரது மகன் தில்லை நாயகம், இவர் சென்னையில் காவல் துறையில் துணை காவல் கண்காணிப் பாளராக பணிபுரிந்து கடந்து 2015ம் ஆண்டு ஓய்வு பெற்று, சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார், இந்நிலை யில், இவர் திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்தில் வந்துள்ளார் அப்பொழுது, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்த பேருந்து பயணிகளை இறக்கி ஏற்றுவதற்காக சற்று நேரம் நிறுத்தி உள்ளனர் அந்த நேரத்தில் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் தில்லைநாயகம் தனது கையில் ரூ. 48, 500 பணம், ஏடிஎம் கார்டு, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்த பையுடன் கழிவறைக்கு சென்றுள்ளார் அங்கு கழிவறை அருகே வைத்துவிட்டு சிறுநீர் கழித்து விட்டு திரும்பி வந்து பார்த்தும் போது அங்கிருந்த பை திருடு போயிருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புற காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார், புகாரை பெற்ற போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து, ஓய்வு பெற்ற காவல் அதிகாரியிடம் பணம், செல்போன் ஏடிஎம் உள்ளிட்ட பொருட்கள் உள்ள பையை திருடிச் சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து தேடி வருகின்றனர்.